Thursday, 12 December 2013

இணைப்பு படிவம் - V அரசின் சுற்றறிக்கை

நண்பர்களே
நமது தமிழக அரசு கடந்த   03-12-2013 அன்று மாதாந்திர படிவம் - I ல் புதியதாக இணைப்பு படிவம் - V  ஐ பற்றி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது அதில் தெரிவிக்கபட்டுள்ள விளக்கங்கள் ..


1) எந்த ஒரு வணிகருக்கு உள்ளிட்டு வரி மிகுதியாக உள்ளதோ அவர் மட்டுமே மேற்படி இணைப்பு படிவத்தை UPLOAD செய்யவேண்டும். வரி செலுத்தினால் அவர் மேற்படி படிவத்தை UPLOAD செய்ய வேண்டியது இல்லை.

2) இந்த இணைப்பு படிவ நடைமுறை 01-11-13 முதல் மட்டுமே..அதாவது     நவம்பர் மாத ரிட்டன்களில் இருந்து.

3) வணிகர்கள் பலதரப்பட்ட பொருட்களை ஒரு வரி விகிதாசாரத்தில் விற்பனை மற்றும் கொள்முதல் செய்து வருகிறார்கள் அவ்வாறு செய்யும் பொழுது அவர்கள் மேற்படி இணைப்பு படிவத்தில் இறுதி சரக்கு இருப்பை அவர்கள் MAJOR COMMODITY மற்றும் அந்த பொருளின் குறியீட்டு எண்ணை மட்டும் பூர்த்தி செய்து சரக்கு இருப்பு தொகையை மட்டும் தெரிவித்தால் மட்டும் போதும்..

4) எண்ணிக்கை அடிப்படையில் சரக்குஇருப்பை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை ..

5) எந்த ஒரு வணிகர் உள் மாநிலத்தில் 14.5% வரி செலுத்தி கொள்முதல் செய்து அந்த பொருளை அவர் வெளி மாநில விற்பனை படிவம் - C, ல்   (SALE AGAINST "C" FORM) விற்பனை செய்கிறாரோ அவ்வணிகர் இருப்பு சரக்குஇருப்பை NIL (பூஜ்ஜியம் ) என தெரிவித்தால் போதும்..

6) எந்த ஒரு வணிகர் உள் மாநிலத்தில் 14.5% வரி செலுத்தி கொள்முதல் செய்து அந்த பொருளை அவர் ஒரு தொழிற்சாலைக்கு தயாரிப்பு தேவைக்கு ஈடு பொருளாக (INDUSTRIAL INPUT ) ஆக விற்பனை செய்தாலும் அவ்வணிகர் இருப்பு சரக்குஇருப்பை NIL (பூஜ்ஜியம் ) என தெரிவித்தால் போதும்..

7) எந்த ஒரு வணிகர் உள் மாநிலத்தில் 14.5% வரி செலுத்தி கொள்முதல் செய்து அந்த பொருளை அவர் அவரது சொந்த கிளை நிறுவனதிர்க்கோ (BRANCH  OFFICE ) அல்லது அவரது முகவர்(AGENT) விற்பனை செய்தாலும் அவ்வணிகர் இருப்பு சரக்குஇருப்பை NIL (பூஜ்ஜியம் ) என தெரிவித்தால் போதும்..

8) எந்த ஒரு வணிகர் உள் மாநிலத்தில் 14.5% வரி செலுத்தி கொள்முதல் செய்து அந்த பொருளை அவர் அப்பொருளை ஏற்றுமதி செய்யும் வணிகற்கோ அல்லது அரசு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள வணிகர்க்கோ (ZERO  RATE  SALES ) விற்பனை செய்தாலும் அவ்வணிகர் இருப்பு சரக்குஇருப்பை NIL (பூஜ்ஜியம் ) என தெரிவித்தால் போதும்..

மேற்படி சுற்றறிக்கை தங்கள் பார்வைக்கு ..





Sunday, 3 November 2013

நவம்பர் மாத ரிட்டன் - ANNEXURE - V புதிதாக....

அன்பான தோழர்களே
தமிழக அரசு வாட் வரி மாதந்திர படிவம் - I  இல் சிறிது புதியதாக மாற்றம் செய்து கடந்த அக்டோபர் மாதம் 31  ஆம் தேதி ஆணை பிறப்பித்து உள்ளது..  மேற்படி ஆணை என்னவென்றால் நவம்பர் மாதத்திய  வாட் வரி மாதந்திர ரிட்டன் படிவம் -I  இல் ANNEXURE - I V  அடுத்தபடியாக ANNEXURE - V  ஐ புகுத்தி உள்ளது, இந்த ANNEXURE - V  இல் எந்த ஒரு வணிகருக்கு வாட் வரி CARRY FORWARD  ஆகி வருகிறதோ அந்த வணிகரின் அந்த மாதத்திய இறுதி சரக்கு இருப்பு குறித்து பட்டியல் மற்றும் இறுதி சரக்கு இருப்பு மதிப்பு தொகையிலும், வரி விகித சாரப்டி தனித்தனியாக தரவேன்றும் என்று கூறப்பட்டு உள்ளது.

அதாவது ஒவ்வொரு மாதத்திலும், வணிகரின் உள்ளீட்டு வரி வரவில் இருந்து(ITC) அவர் அம்மாதத்தில் ரிட்டன் படி செலுத்தவேண்டிய வரியினை (OUTPUT  TAX ) கழித்தது போக, மிகுதி உள்ளீட்டு வரி வரவு (ITC  CARRY  FORWARD ) ஏதும் இருந்தால் மட்டுமே அவர் மேற்படி ANNEXURE - V  ஐ UPLOAD செய்யவேண்டும்.

அவ்வாறு மிகுதி ITC (ITC  CARRY  FORWARD ) இல்லையெனில் அவ்வணிகர் மேற்படி  ANNEXURE - V  ஐ UPLOAD செய்யவேண்டிய அவசியம் இல்லை. 

அக்டோபர் மாத ரிட்டன்களில் எந்த மாற்றமும் இல்லை, இந்த நடைமுறை நவம்பர் மாத ரிட்டன்களில் இருந்து மட்டுமே.....

அரசின் ஆணை கீழே..





Saturday, 31 August 2013

சேவை வரி ரிட்டன்கள் ST -3 (01-10-2012 முதல் 31-03-2013)

அன்புள்ள நண்பர்களே
நமது வணிகர்களின்  சேவை வரி ரிட்டன்கள் ST  -3  (01-10-2012 முதல் 31-03-2013) முடிய கணிணி முறையில் தாக்கல் செய்யும் தேதி சற்று தள்ளி வைக்கபட்டுஉள்ளது, அதாவது மேற்படி ரிட்டன் தாக்கல் செய்யும் தேதி இன்று(31-08-2013) ஆக இருந்ததை வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது மத்திய கலால் மற்றும் சேவை வரி துறை... அதற்கான அரசு அறிவிப்பு தங்கள் பார்வைக்கு.


அன்புள்ள நண்பர்களே
நமது மத்திய அரசின் சேவை வரி 
அன்புள்ள நண்பர்களே
நமது மத்திய அரசின் சேவை வரி ரிட்டன் தாக்கல் 
அன்புள்ள நண்பர்களே
நமது வணிகர்களின்  சேவை வரி ரிட்டன் தாக்கல் 

Friday, 17 May 2013

வருடாந்திர நமுனா FORM - I(1) தற்போது மிண்ணனு முறையில்

தோழர்களே 
நாம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த காத்து இருந்த வருடாந்திர நமுனா  FORM - I(1) தற்போது மிண்ணனு  முறையில் தாக்கல் செய்வதற்கான நடைமுறை வந்து விட்டது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

படிவம் தாக்கல் செய்வதற்கு கீழே உள்ள லிங்க் ஐ அழுத்தவும்.

http://ctaxcms.tn.nic.in/annualreturn/

Monday, 13 May 2013

ஆடம்பர வரி சட்டம் (Luxury Tax )

அன்புள்ள நண்பர்களே
நமது முதல்வர் இன்று சட்ட மன்ற கூடத்தில் ஆடம்பர வரி சட்டம் (Luxury  Tax )   குறித்து வெளியிட்ட அறிக்கை தங்கள் பார்வைக்கு ..

பதிப்பில் உதவி : செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை. 
தமிழக அரசு 

Monday, 6 May 2013

வணிக வரித்துறை அலுவலகத்திற்கு செல்லாமலே நேரடியாக வங்கிகளில் செலுத்தும் முறை

நண்பர்களே 
நமது தமிழக அரசின் வணிக வரி துறை கொள்கை விளக்க குறிப்பில் வணிகர்களின் வணிக வரிகளை வணிக வரித்துறை அலுவலகத்திற்கு செல்லாமலே நேரடியாக வங்கிகளில் செலுத்தும் முறையை கொண்டு வர திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெர்வித்து உள்ளது மேலும் அதை செயல் படுத்துவதற்கான மென் பொருளை (SOFTWARE) தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்க பட்டு உள்ளது. 

பதிப்பில் உதவி.. : தினமலர் 




Tuesday, 30 April 2013

சேவை வரி நமுனாக்கள்

அன்புள்ள தோழர்களே
கடந்த அக்டோபர்  - 2012 முதல் மார்ச் -2013 முடிய  நமது வணிகர்களின்  சேவை வரி நமுனாக்கள் மின்னணு முறையில் தாக்கல் செய்வதற்கான தேதியை வரும் ஆகஸ்ட் -2013 வரை நீடித்து உள்ளது மத்திய அரசு.. மேற்படி நமுனாக்கள் தாக்கல் செய்வதற்கான மென் பொருளை இனி வரும் நாட்களில் அரசு இணையத்தில் (aces.gov.in) வெளியிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் ..

மத்திய அரசின் அரசு ஆணை தங்கள் பார்வைக்கு 

Tuesday, 26 March 2013

மத்திய அரசு சேவை வரி ரிட்டன்கள் ஜூலை 2012 to செப்டம்பர் 2012

தோழர்களே ..

நமது மத்திய அரசு சேவை வரி ரிட்டன்கள் ஜூலை 2012 to  செப்டம்பர் 2012

முடிய மின்னணு மூலமாக தாக்கல் செய்வதற்கான மென்பொருள்(Software )

தற்போது கீழே லிங்க் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் ..

https://www.aces.gov.in/download.jsp

Thursday, 21 March 2013

வாட் வரிகளை மின்னணு முறையில் செலுத்துதல்

நண்பர்களே ..
நமது வணிகர்களின் வாட் வரிகளை மின்னணு முறையில் செலுத்துமாறு வணிக வரி அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.. மேற்படி வாட் வரிகளை மின்னணு முறையில் செலுத்துவதற்கு நமது தமிழக அரசு அறிவித்து உள்ள பொது துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் பெயர்கள்...

1) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 

2) இந்தியன் வங்கி 

3) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 

4) பேங்க் ஆப் இந்தியா 

5) கார்ப்பொரேசன்  வங்கி 

6) H.D.F.C. வங்கி 

7) ஆக்சிஸ் வங்கி 

8) பேங்க் ஆப் பரோடா 

9) கனரா வங்கி 

10) I.C.I.C.I.  வங்கி 

11)சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 

12) சிட்டி யூனியன் பேங்க் 

13) யூனியன் பேங்க் ஆப் இந்தியா 

14) பெடரல்  பேங்க் 

15) ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் 

16) ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் 

17) விஜயா வங்கி 

மேலும் பின்வரும் வங்கிகளின் பெயர்களை Reserve Bank of India  வின் பரிந்துரைக்கு தமிழக அரசு அனுப்பி உள்ளது. 

1) தமிழ் நாடு மெர்கன்டைல்  வங்கி 
2) I.D.B.I. வங்கி 
3) UCO  வங்கி 
4) பஞ்சாப் நேஷனல் வங்கி 
5) யுனைடெட்  பேங்க் ஆப் இந்தியா 
6) கத்தோலிக்  சிரியன்  வங்கி 
7) கரூர் வைசியா  வங்கி 
8) YES  வங்கி 
9) ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா 
10) பேங்க் ஆப் மகாராஷ்டிரா 
11) ஒரியண்டல்  பேங்க் ஆப் காமர்ஸ்


மிக விரைவில் மேலே குறிப்பிட்டு உள்ள  பதினோரு வங்கிகளும் மின்னணு வாட்  வரி செலுத்தும் பட்டியலில் இணைக்கப்படும் என நம்புகிறேன்.. 



Wednesday, 20 March 2013

Last Date for Luxury and Hotels Renewals

Friends..

The Renewals of Last Date for Luxury and Hotels TIN Number is 31-03-2013.. The Renewal Fee is Rs. 500/- only.. The dealers will pay the L & H Tax through Demand Draft as well as Cash Payments to Sales Tax Collection Inspector.


Thursday, 14 March 2013

வணிகர்களின் வெளி மாநில கொள்முதல் பொருட்கள் தவறுதலாக

நண்பர்களே

நமது தமிழக அரசு வாட் வரி இணையதளத்தில் "C " படிவம் மற்றும் "F "

படிவங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வழி  ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மேற்படி படிவங்கள் பதிவிறக்கம் செய்ய நமது வணிகர்களின் வெளி மாநில

கொள்முதல் பொருட்கள் (CST  CERTIFICATE ) உள்ள மாதிரி இல்லாமல்

தவறுதலாக காண்பிக்கப்பட்டு  உள்ளது. இது குறித்து நீங்கள் அந்த அந்த வரி

விதிப்பு அலுவலரிடம் கீழே உள்ள மாதிரி கடிதத்தை உபயோகிக்கலாம்.




Thursday, 7 March 2013

Service Tax Return ST 3 July 12 to Sept 12 due date extended


Dear Friends...

CBEC extends the date of e-filing of the new Service Tax Return (ST-3) for the period from 1st July 2012 to 30th September 2012, from 25th March, 2013 to 15th April, 2013.
The electronic version of the ST 3 Return is under development and is expected to be available on ACES around 20th March, 2013.                      
The exact date of the availability of the new ST 3 return in ACES for the period April-June, 2012 and for the period October, 2012 – March, 2013 will be announced later.

Thursday, 28 February 2013

Service Tax Return July - Sep 2012 - Due Date


Dear Friends...
Service tax e-return format is yet to be notified

As per Notification No. 01/2013-Service Tax , ST3 returns pertaining to the period July - Sep 2012 are to be filed by 25-Mar-2013. However, as of now, only the paper return of 'Form ST3' is notified. The e-return format is yet to be notified by the department. As soon as the same is notified, we will update the service tax utility.