பேரன்பு கொண்ட நண்பர்களே
நாம் நெடுங்காலமாக எதிர் பார்த்து கொண்டு இருந்த C இதழ் (C - Form and F - Form) ஆகியவை தற்போது ஆன்லைன் மூலமாக இறக்கம் (online download) செய்து கொள்ளலாம் என்று நமது தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது அந்த அரசு ஆணையை தங்களின் பார்வைக்கு...
மேலும் இந்த நடைமுறை விரைவில் நமது வணிக வரித்துறை இணையத்தளத்தில் தொடங்க உள்ளது அந்த அறிவிப்பு கிடைக்க பெற்றவுடன் தங்களுடன் பகிர்ந்துகொள்ளுகிறேன், Form - I and Form J யில் சிறு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.. annexure - 1 - இல் இனி வெளி மாநில கொள்முதல்களுக்கு category -O என்று கொடுத்தால் அந்த கொள்முதல்களுக்கு C Form டவுன்லோட் செய்யமுடியாது.. மேலும் புதிதாக annexure - 1 A உருவாக்கப்பட்டு உள்ளது அந்த annexure இல் வெளி மாநில கொள்முதல்கள் அதாவது C - Form and F - Form மட்டுமே category - J என்று காண்பிக்கப்பட்டு upload செய்யவேண்டும் அப்படி செய்தால் தான் C - Form and F - Form டவுன்லோட் செய்யமுடியும்.. மேற்படி படிவங்கள் பதிவிறக்கம் செய்ய கட்டணங்கள் ஏதும் இல்லை..