Saturday, 22 November 2014

மின்னணு முறையில் "C" படிவம் மற்றும் "F" படிவம் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்வது குறித்து

அன்புள்ள நண்பர்களே


நமது தமிழக அரசு கடந்த 10-11-2014 அன்று மின்னணு முறையில் "C" படிவம் மற்றும் "F" படிவம் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்வது குறித்து ஒரு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதாவது "C" படிவம் & "F" படிவம் (GENERATION) செய்வது ஆறு (6) மாதமாக இருந்து வந்ததை முழுவதுமாக நீக்கி ஆணை பிறப்பித்து உள்ளது. மேலும் இந்த நடைமுறையில் வணிகர்இணைப்பு படிவம் - I(A) அப்லோட் செய்து இருந்தால் மட்டுமே "C" மற்றும்"F" படிவத்தை டவுன்லோட் செய்ய முடியும். 

மேற்படி படிவங்கள் மார்ச் - 2014 வரை மட்டுமே பொருந்தும்.


Tuesday, 1 April 2014

SERVICE TAX RETURN (ST-3) PERIOD --- OCT_2013 TO MARCH_2014 - DUE DATE

Friends..


Service Tax Return (ST-3) for the period Oct,13 -March,14 is now available for e-filing by the assessees in both offline and online version. The last date of filing the ST-3 return for the said period is 25th April, 2014. However, to avoid congestion and inconvenience in the last minute, all assessees who wish to file their ST-3 for the said period are advised to start e-filing the returns immediately and not to wait till the last date. 

E - Filing Utility Schema Link:


Sunday, 9 March 2014

ஏப்ரல் – 2000 முதல் செப்டம்பர் – 2012 வரை C படிவம்


பேரன்பு கொண்ட தோழர்களே 

ஏப்ரல் – 2000 முதல் செப்டம்பர் – 2012 வரை வணிகர்களின் வெளி மாநில கொள்முதல்களுக்கான (PURCHASE AGAINST FORM – C) C படிவத்தை கணினி முறையில் பெற்றுக்கொள்ள நமது தமிழக அரசு கடந்த மாதம் 13 (13-02-2014) ஆம் தேதி முதல் தமிழக அரசின் வணிக வரி துறை  இணைய தளத்தில் நடைமுறைபடுத்தி உள்ளது, மேற்படி படிவவங்களை மாதம் தோறும் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் மேலும் இந்த நடை முறை 6 மாதங்களுக்கு மட்டுமே... அதாவது ஆகஸ்ட்-2014 மாதம் வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்..

மேற்படி கணினி முறையில் பதிவிறக்கம் செய்வதற்கு வணிகர் அவர் தம்  E- FILING LOGIN ACCOUNT -இல் login செய்து BACK LOG C FORMS என்று உள்ள லிங்கில் கொள்முதல் பற்றிய விபரங்களை ஒரு EXCEL சீட்டில்UPLOAD செய்யவேண்டும் அவ்வாறு செய்யப்பட்ட கொள்முதல் பில்களின் நகல்களை ஒரு கடிதத்தின் மூலமாக அவரவர் வரி விதிப்பு அலுவலரிடம் சமர்ப்பித்து பின்னர் அவர் அந்த வரி விதிப்பு அலுவலக அலுவலர் (SYSTEM ASSISTANT – A2) மூலமாக வணிகரின் – C படிவத்தை கணினி முறையில் பதிவிறக்கம் செய்ய  ஆணை வழங்குவார், அவர் ஆணை வழங்கிய பின்னர் மட்டுமே வணிகரின் – C படிவத்தை அவர் பதிவிறக்கம் செய்யமுடியம்.

 அரசின் சுற்றறிக்கை தங்கள் பார்வைக்கு 


Thursday, 12 December 2013

இணைப்பு படிவம் - V அரசின் சுற்றறிக்கை

நண்பர்களே
நமது தமிழக அரசு கடந்த   03-12-2013 அன்று மாதாந்திர படிவம் - I ல் புதியதாக இணைப்பு படிவம் - V  ஐ பற்றி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது அதில் தெரிவிக்கபட்டுள்ள விளக்கங்கள் ..


1) எந்த ஒரு வணிகருக்கு உள்ளிட்டு வரி மிகுதியாக உள்ளதோ அவர் மட்டுமே மேற்படி இணைப்பு படிவத்தை UPLOAD செய்யவேண்டும். வரி செலுத்தினால் அவர் மேற்படி படிவத்தை UPLOAD செய்ய வேண்டியது இல்லை.

2) இந்த இணைப்பு படிவ நடைமுறை 01-11-13 முதல் மட்டுமே..அதாவது     நவம்பர் மாத ரிட்டன்களில் இருந்து.

3) வணிகர்கள் பலதரப்பட்ட பொருட்களை ஒரு வரி விகிதாசாரத்தில் விற்பனை மற்றும் கொள்முதல் செய்து வருகிறார்கள் அவ்வாறு செய்யும் பொழுது அவர்கள் மேற்படி இணைப்பு படிவத்தில் இறுதி சரக்கு இருப்பை அவர்கள் MAJOR COMMODITY மற்றும் அந்த பொருளின் குறியீட்டு எண்ணை மட்டும் பூர்த்தி செய்து சரக்கு இருப்பு தொகையை மட்டும் தெரிவித்தால் மட்டும் போதும்..

4) எண்ணிக்கை அடிப்படையில் சரக்குஇருப்பை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை ..

5) எந்த ஒரு வணிகர் உள் மாநிலத்தில் 14.5% வரி செலுத்தி கொள்முதல் செய்து அந்த பொருளை அவர் வெளி மாநில விற்பனை படிவம் - C, ல்   (SALE AGAINST "C" FORM) விற்பனை செய்கிறாரோ அவ்வணிகர் இருப்பு சரக்குஇருப்பை NIL (பூஜ்ஜியம் ) என தெரிவித்தால் போதும்..

6) எந்த ஒரு வணிகர் உள் மாநிலத்தில் 14.5% வரி செலுத்தி கொள்முதல் செய்து அந்த பொருளை அவர் ஒரு தொழிற்சாலைக்கு தயாரிப்பு தேவைக்கு ஈடு பொருளாக (INDUSTRIAL INPUT ) ஆக விற்பனை செய்தாலும் அவ்வணிகர் இருப்பு சரக்குஇருப்பை NIL (பூஜ்ஜியம் ) என தெரிவித்தால் போதும்..

7) எந்த ஒரு வணிகர் உள் மாநிலத்தில் 14.5% வரி செலுத்தி கொள்முதல் செய்து அந்த பொருளை அவர் அவரது சொந்த கிளை நிறுவனதிர்க்கோ (BRANCH  OFFICE ) அல்லது அவரது முகவர்(AGENT) விற்பனை செய்தாலும் அவ்வணிகர் இருப்பு சரக்குஇருப்பை NIL (பூஜ்ஜியம் ) என தெரிவித்தால் போதும்..

8) எந்த ஒரு வணிகர் உள் மாநிலத்தில் 14.5% வரி செலுத்தி கொள்முதல் செய்து அந்த பொருளை அவர் அப்பொருளை ஏற்றுமதி செய்யும் வணிகற்கோ அல்லது அரசு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள வணிகர்க்கோ (ZERO  RATE  SALES ) விற்பனை செய்தாலும் அவ்வணிகர் இருப்பு சரக்குஇருப்பை NIL (பூஜ்ஜியம் ) என தெரிவித்தால் போதும்..

மேற்படி சுற்றறிக்கை தங்கள் பார்வைக்கு ..





Sunday, 3 November 2013

நவம்பர் மாத ரிட்டன் - ANNEXURE - V புதிதாக....

அன்பான தோழர்களே
தமிழக அரசு வாட் வரி மாதந்திர படிவம் - I  இல் சிறிது புதியதாக மாற்றம் செய்து கடந்த அக்டோபர் மாதம் 31  ஆம் தேதி ஆணை பிறப்பித்து உள்ளது..  மேற்படி ஆணை என்னவென்றால் நவம்பர் மாதத்திய  வாட் வரி மாதந்திர ரிட்டன் படிவம் -I  இல் ANNEXURE - I V  அடுத்தபடியாக ANNEXURE - V  ஐ புகுத்தி உள்ளது, இந்த ANNEXURE - V  இல் எந்த ஒரு வணிகருக்கு வாட் வரி CARRY FORWARD  ஆகி வருகிறதோ அந்த வணிகரின் அந்த மாதத்திய இறுதி சரக்கு இருப்பு குறித்து பட்டியல் மற்றும் இறுதி சரக்கு இருப்பு மதிப்பு தொகையிலும், வரி விகித சாரப்டி தனித்தனியாக தரவேன்றும் என்று கூறப்பட்டு உள்ளது.

அதாவது ஒவ்வொரு மாதத்திலும், வணிகரின் உள்ளீட்டு வரி வரவில் இருந்து(ITC) அவர் அம்மாதத்தில் ரிட்டன் படி செலுத்தவேண்டிய வரியினை (OUTPUT  TAX ) கழித்தது போக, மிகுதி உள்ளீட்டு வரி வரவு (ITC  CARRY  FORWARD ) ஏதும் இருந்தால் மட்டுமே அவர் மேற்படி ANNEXURE - V  ஐ UPLOAD செய்யவேண்டும்.

அவ்வாறு மிகுதி ITC (ITC  CARRY  FORWARD ) இல்லையெனில் அவ்வணிகர் மேற்படி  ANNEXURE - V  ஐ UPLOAD செய்யவேண்டிய அவசியம் இல்லை. 

அக்டோபர் மாத ரிட்டன்களில் எந்த மாற்றமும் இல்லை, இந்த நடைமுறை நவம்பர் மாத ரிட்டன்களில் இருந்து மட்டுமே.....

அரசின் ஆணை கீழே..