Sunday, 9 March 2014

ஏப்ரல் – 2000 முதல் செப்டம்பர் – 2012 வரை C படிவம்


பேரன்பு கொண்ட தோழர்களே 

ஏப்ரல் – 2000 முதல் செப்டம்பர் – 2012 வரை வணிகர்களின் வெளி மாநில கொள்முதல்களுக்கான (PURCHASE AGAINST FORM – C) C படிவத்தை கணினி முறையில் பெற்றுக்கொள்ள நமது தமிழக அரசு கடந்த மாதம் 13 (13-02-2014) ஆம் தேதி முதல் தமிழக அரசின் வணிக வரி துறை  இணைய தளத்தில் நடைமுறைபடுத்தி உள்ளது, மேற்படி படிவவங்களை மாதம் தோறும் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் மேலும் இந்த நடை முறை 6 மாதங்களுக்கு மட்டுமே... அதாவது ஆகஸ்ட்-2014 மாதம் வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்..

மேற்படி கணினி முறையில் பதிவிறக்கம் செய்வதற்கு வணிகர் அவர் தம்  E- FILING LOGIN ACCOUNT -இல் login செய்து BACK LOG C FORMS என்று உள்ள லிங்கில் கொள்முதல் பற்றிய விபரங்களை ஒரு EXCEL சீட்டில்UPLOAD செய்யவேண்டும் அவ்வாறு செய்யப்பட்ட கொள்முதல் பில்களின் நகல்களை ஒரு கடிதத்தின் மூலமாக அவரவர் வரி விதிப்பு அலுவலரிடம் சமர்ப்பித்து பின்னர் அவர் அந்த வரி விதிப்பு அலுவலக அலுவலர் (SYSTEM ASSISTANT – A2) மூலமாக வணிகரின் – C படிவத்தை கணினி முறையில் பதிவிறக்கம் செய்ய  ஆணை வழங்குவார், அவர் ஆணை வழங்கிய பின்னர் மட்டுமே வணிகரின் – C படிவத்தை அவர் பதிவிறக்கம் செய்யமுடியம்.

 அரசின் சுற்றறிக்கை தங்கள் பார்வைக்கு