Monday, 15 December 2014

புதிய நடைமுறை மின்னணு முறையில் "C" படிவம் மற்றும் "F" படிவம் பதிவிறக்கம் (DOWNLOAD)


நமது தமிழக அரசு நமது வணிகர்களின் வாட் வரி மாதாந்திர நமுனா

(ONLINE RETURNS - FORM - I )  தாக்கல் செய்து உடனே மிண்ணனு முறையில்

"C" படிவம் மற்றும் "F" படிவம் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து 

கொள்ளலாம்என்ற நடைமுறையை மாற்றி மாதாந்திர நமுனா 

 (ONLINE RETURNS - FORM - I ) தாக்கல் செய்து ஒரு மாத காலம் சென்ற 

பிறகே மிண்ணனு முறையில்   "C" படிவம் மற்றும் "F" படிவம் 

பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து கொள்ளலாம் என்று  ஆணை 

பிறப்பித்து உள்ளது. மேற்படி நடைமுறை இன்றுமுதல் உடனடியாக நடை 

முறைக்கு வந்துள்ளது..

அதாவது நவம்பர் மாத ரிட்டன் தாக்கல் தேதி 15-12-2014 எனில்  அந்த

மாதத்திற்க்கான "C" மற்றும் "F" படிவத்தை ஜனவரி மாதம் (15-01-2015) அன்று

முதல்  பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து கொள்ளலாம்..


Wednesday, 10 December 2014

Back Log Online Form - C

Dear Friends..

Back Log Online Form - C due date extended up to 15-02-2015.

Cheers.. 

Saturday, 22 November 2014

மின்னணு முறையில் "C" படிவம் மற்றும் "F" படிவம் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்வது குறித்து

அன்புள்ள நண்பர்களே


நமது தமிழக அரசு கடந்த 10-11-2014 அன்று மின்னணு முறையில் "C" படிவம் மற்றும் "F" படிவம் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்வது குறித்து ஒரு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதாவது "C" படிவம் & "F" படிவம் (GENERATION) செய்வது ஆறு (6) மாதமாக இருந்து வந்ததை முழுவதுமாக நீக்கி ஆணை பிறப்பித்து உள்ளது. மேலும் இந்த நடைமுறையில் வணிகர்இணைப்பு படிவம் - I(A) அப்லோட் செய்து இருந்தால் மட்டுமே "C" மற்றும்"F" படிவத்தை டவுன்லோட் செய்ய முடியும். 

மேற்படி படிவங்கள் மார்ச் - 2014 வரை மட்டுமே பொருந்தும்.


Tuesday, 1 April 2014

SERVICE TAX RETURN (ST-3) PERIOD --- OCT_2013 TO MARCH_2014 - DUE DATE

Friends..


Service Tax Return (ST-3) for the period Oct,13 -March,14 is now available for e-filing by the assessees in both offline and online version. The last date of filing the ST-3 return for the said period is 25th April, 2014. However, to avoid congestion and inconvenience in the last minute, all assessees who wish to file their ST-3 for the said period are advised to start e-filing the returns immediately and not to wait till the last date. 

E - Filing Utility Schema Link:


Sunday, 9 March 2014

ஏப்ரல் – 2000 முதல் செப்டம்பர் – 2012 வரை C படிவம்


பேரன்பு கொண்ட தோழர்களே 

ஏப்ரல் – 2000 முதல் செப்டம்பர் – 2012 வரை வணிகர்களின் வெளி மாநில கொள்முதல்களுக்கான (PURCHASE AGAINST FORM – C) C படிவத்தை கணினி முறையில் பெற்றுக்கொள்ள நமது தமிழக அரசு கடந்த மாதம் 13 (13-02-2014) ஆம் தேதி முதல் தமிழக அரசின் வணிக வரி துறை  இணைய தளத்தில் நடைமுறைபடுத்தி உள்ளது, மேற்படி படிவவங்களை மாதம் தோறும் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் மேலும் இந்த நடை முறை 6 மாதங்களுக்கு மட்டுமே... அதாவது ஆகஸ்ட்-2014 மாதம் வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்..

மேற்படி கணினி முறையில் பதிவிறக்கம் செய்வதற்கு வணிகர் அவர் தம்  E- FILING LOGIN ACCOUNT -இல் login செய்து BACK LOG C FORMS என்று உள்ள லிங்கில் கொள்முதல் பற்றிய விபரங்களை ஒரு EXCEL சீட்டில்UPLOAD செய்யவேண்டும் அவ்வாறு செய்யப்பட்ட கொள்முதல் பில்களின் நகல்களை ஒரு கடிதத்தின் மூலமாக அவரவர் வரி விதிப்பு அலுவலரிடம் சமர்ப்பித்து பின்னர் அவர் அந்த வரி விதிப்பு அலுவலக அலுவலர் (SYSTEM ASSISTANT – A2) மூலமாக வணிகரின் – C படிவத்தை கணினி முறையில் பதிவிறக்கம் செய்ய  ஆணை வழங்குவார், அவர் ஆணை வழங்கிய பின்னர் மட்டுமே வணிகரின் – C படிவத்தை அவர் பதிவிறக்கம் செய்யமுடியம்.

 அரசின் சுற்றறிக்கை தங்கள் பார்வைக்கு