Thursday, 12 December 2013

இணைப்பு படிவம் - V அரசின் சுற்றறிக்கை

நண்பர்களே
நமது தமிழக அரசு கடந்த   03-12-2013 அன்று மாதாந்திர படிவம் - I ல் புதியதாக இணைப்பு படிவம் - V  ஐ பற்றி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது அதில் தெரிவிக்கபட்டுள்ள விளக்கங்கள் ..


1) எந்த ஒரு வணிகருக்கு உள்ளிட்டு வரி மிகுதியாக உள்ளதோ அவர் மட்டுமே மேற்படி இணைப்பு படிவத்தை UPLOAD செய்யவேண்டும். வரி செலுத்தினால் அவர் மேற்படி படிவத்தை UPLOAD செய்ய வேண்டியது இல்லை.

2) இந்த இணைப்பு படிவ நடைமுறை 01-11-13 முதல் மட்டுமே..அதாவது     நவம்பர் மாத ரிட்டன்களில் இருந்து.

3) வணிகர்கள் பலதரப்பட்ட பொருட்களை ஒரு வரி விகிதாசாரத்தில் விற்பனை மற்றும் கொள்முதல் செய்து வருகிறார்கள் அவ்வாறு செய்யும் பொழுது அவர்கள் மேற்படி இணைப்பு படிவத்தில் இறுதி சரக்கு இருப்பை அவர்கள் MAJOR COMMODITY மற்றும் அந்த பொருளின் குறியீட்டு எண்ணை மட்டும் பூர்த்தி செய்து சரக்கு இருப்பு தொகையை மட்டும் தெரிவித்தால் மட்டும் போதும்..

4) எண்ணிக்கை அடிப்படையில் சரக்குஇருப்பை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை ..

5) எந்த ஒரு வணிகர் உள் மாநிலத்தில் 14.5% வரி செலுத்தி கொள்முதல் செய்து அந்த பொருளை அவர் வெளி மாநில விற்பனை படிவம் - C, ல்   (SALE AGAINST "C" FORM) விற்பனை செய்கிறாரோ அவ்வணிகர் இருப்பு சரக்குஇருப்பை NIL (பூஜ்ஜியம் ) என தெரிவித்தால் போதும்..

6) எந்த ஒரு வணிகர் உள் மாநிலத்தில் 14.5% வரி செலுத்தி கொள்முதல் செய்து அந்த பொருளை அவர் ஒரு தொழிற்சாலைக்கு தயாரிப்பு தேவைக்கு ஈடு பொருளாக (INDUSTRIAL INPUT ) ஆக விற்பனை செய்தாலும் அவ்வணிகர் இருப்பு சரக்குஇருப்பை NIL (பூஜ்ஜியம் ) என தெரிவித்தால் போதும்..

7) எந்த ஒரு வணிகர் உள் மாநிலத்தில் 14.5% வரி செலுத்தி கொள்முதல் செய்து அந்த பொருளை அவர் அவரது சொந்த கிளை நிறுவனதிர்க்கோ (BRANCH  OFFICE ) அல்லது அவரது முகவர்(AGENT) விற்பனை செய்தாலும் அவ்வணிகர் இருப்பு சரக்குஇருப்பை NIL (பூஜ்ஜியம் ) என தெரிவித்தால் போதும்..

8) எந்த ஒரு வணிகர் உள் மாநிலத்தில் 14.5% வரி செலுத்தி கொள்முதல் செய்து அந்த பொருளை அவர் அப்பொருளை ஏற்றுமதி செய்யும் வணிகற்கோ அல்லது அரசு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள வணிகர்க்கோ (ZERO  RATE  SALES ) விற்பனை செய்தாலும் அவ்வணிகர் இருப்பு சரக்குஇருப்பை NIL (பூஜ்ஜியம் ) என தெரிவித்தால் போதும்..

மேற்படி சுற்றறிக்கை தங்கள் பார்வைக்கு ..